ஈரான் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல் - மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம்!

தெற்கு ஈரானில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்களையும், கண்ணிவெடிகளைப் பதிப்பதற்கு முயன்ற படகுகளையும் குறிவைத்து, அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் "தற்காப்புக்காகவே" மேற்கொள்ளப்பட்டதாகவும், "இரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து எங்கள் படைகளைப் பாதுகாக்கும்" நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதாகவும் அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"தற்போதைய போர் நிறுத்தத்தின்போது நிதானத்தைக் கடைப்பிடித்து, அமெரிக்க இராணுவம் நமது படைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது" என்று மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறினார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் "உடனடியாக ஏற்படாது" என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.




