போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தோஹாவிற்கு திடீர் பயணம் செய்துள்ள ஈரானிய உயர்குழு!

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான உயர்மட்டக் குழு கத்தார் தலைநகர் தோஹாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த இராஜதந்திரக் குழுவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அப்துல்நசீர் ஹெம்மாட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், கத்தார் பிரதமருடனான இந்த விவாதத்தில் முக்கியமாக பாதுகாப்பு, அணுசக்திப் பிரச்சினைகள், ஹோர்முஸ் ஜலசந்தியின் கடல்வழி முற்றுகை மற்றும் ஈரானின் யுரேனியம் கையிருப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
பொருளாதார முக்கியத்துவம்: ஈரானின் முடக்கப்பட்ட நிதிச் சொத்துக்களை மீட்பது, இறுதி அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அங்கமாக உள்ளதால், இதில் ஈரானிய மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.




