விசா பெறுவதில் சிக்கல் - நியூயோர்க்கில் நடைபெறும் ஐ. நா. பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தை புறக்கணித்த ஈரான்!

அமெரிக்க விசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தில் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கலந்துகொள்ள மாட்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயியைமேற்கோள் காட்டி இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




