NPT அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம் - அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை!

ஈரானிய உச்ச தலைவரின் மூத்த ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் அமெரிக்காவின் மூலோபாய முடக்கத்திற்கு எதிராக அசுரத்தனமான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"வாஷிங்டனும் டிரம்ப் நிர்வாகமும் ஈரான் விவகாரத்தில் ஒரு 'முழுமையான முட்டுக்கட்டையை' சந்தித்து வருகின்றன. அவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களின் தேசிய உரிமைகளைப் பறிக்க முயல்கிறார்கள்.
அமெரிக்கா எங்களின் துறைமுகங்கள் மீது விதித்துள்ள சட்டவிரோத கடற்படை முற்றுகையை ஈரான் ராணுவம் மிக விரைவில் உடைத்தெறியும்.
ஒருவேளை இஸ்லாமியக் குடியரசு மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து ஈரான் உடனடியாக விலகும்" என ரெசாய் பிரகடனம் செய்துள்ளார்.
மேலும், அமெரிக்கா போரைத் தேர்ந்தெடுத்தால் ஹோர்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா, பாப் அல்-மந்தப் முதல் இந்தியப் பெருங்கடல் வரை அமெரிக்கப் படைகள் ஒரு 'இருண்ட மற்றும் முடிவற்ற பாதாளத்திற்குள்' தள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி கண்காணிப்பு முகமையின் விதிகளை ஈரான் இதுவரை மதித்து நடந்துள்ள போதிலும், அமெரிக்காவின் அழுத்தங்கள் தொடர்ந்தால் ஈரானின் அணுசக்திப் பாதை தற்காப்பிற்காக முற்றிலும் மாறும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.




