காசா உதவிப் படகு விவகாரம் - பிரான்சில் இஸ்ரேலிய அமைச்சருக்கு விசா தடை!

காசா மக்களின் மீதான இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை உடைக்கச் சென்ற மனிதாபிமான ஆர்வலர்களை இஸ்ரேலியச் சிறையில் மண்டியிட வைத்து, தனது அதிகாரத் திமிரைக் காட்டிய இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர் இதாமர் பென்-க்விரிற்கு சர்வதேச சமூகம் தகுந்த பாடம் புகட்டத் தொடங்கியுள்ளது.
துருக்கியின் இராஜதந்திர அழுத்தத்தால் இலங்கையின் சமீரா உட்பட 428 ஆர்வலர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ரமோன் விமான நிலையம் வழியாக வெளியேறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசு மிகப்பெரிய இராஜதந்திரச் சாட்டையடியை இஸ்ரேலுக்குக் கொடுத்துள்ளது.
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலாவில் பயணித்த பிரெஞ்சு நாட்டு ஆர்வலர்களை பென்-க்விர் சிறைக்குள் நேரில் சென்று இழிவுபடுத்திய வீடியோவிற்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து, இதாமர் பென்-க்விர் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.
நாஜி காலத்து வரலாற்றிலிருந்து ஐரோப்பா பாடம் கற்க வேண்டும்" என ஈரான் எச்சரித்திருந்த நிலையில், பிரான்சின் இந்தத் தடை இஸ்ரேலிய அமைச்சரவையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது




