லண்டனில் கார் விபத்து - புங்குடுதீவு இளைஞன் உயிரிழப்பு ; காயமடைந்தவர்கள் வான் வழி அம்புலன்ஸ் மூலம் மீட்பு

லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் , புங்குடுதீவு பகுதியை பூர்வீகமாகவும் , லண்டன் சவுத்காலை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் பிரவீன் (வயது 29) என்பவர் உயிரிழந்துள்ளார்.
ஈஸ்ட் கோட் லேன் வீதியில் அதிவேகமாக சென்ற காரினை அவதானித்த பொலிஸார் அதனை பின் தொடர்ந்த வேளை , கார் வீதியோரமாக நின்ற மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கார் விபத்துக்கு உள்ளான போது காரினுள் மூவர் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரையும் மீட்டு , அவசர முதலுதவி வழங்கிய போதிலும் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் ஏனைய இருவரும் 25 மற்றும் 20 வயதுடையவர்கள் எனவும், அவர்களை வான் வழி அம்புலன்ஸ் ஊடாக மருத்துவ மனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






