வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேக நபர் பலி!

அமெரிக்க வெள்ளை மாளிகை வளாகத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியை அணுகிய ஒருவர், அங்கு பணியில் இருந்த இரகசிய சேவை அதிகாரிகள் மீது துப்பாக்கியால் சுட்டதில், இருவர் காயமடைந்ததாக ஒரு சட்ட அமலாக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் பதிலடி கொடுத்ததில், சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின் போது ஒரு பொதுமகனும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் காயமடைந்தார், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இரகசிய சேவை ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தின் போது அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்தார் மற்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேபோன்ற தாக்குதல் கடந்த மாதமும் வெள்ளை மாளிகையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.




