இஸ்ரேல் தின கொண்டாட்ட பேரணியை புறக்கணித்த நியூயார்க் நகர மேயர்!

நியூயார்க் நகரின் ஐந்தாவது அவென்யூவில் (Fifth Avenue) ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் பாரம்பரியமிக்க "இஸ்ரேல் தின கொண்டாட்ட பேரணியை" (Celebrate Israel Parade) முற்றிலுமாக புறக்கணிப்பதாக நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நியூயார்க் மாநகர மேயர்கள் பல தசாப்த காலமாக கடைப்பிடித்து வந்த மிக முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர பாரம்பரியத்தை அவர் உடைத்தெறிந்துள்ளார்




