நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுக்கும் இஸ்ரேலிய இராணுவம்!

“லெபனானிடம் ஓர் உடன்பாட்டை எட்டுங்கள் அல்லது எங்களை விட்டு விடுங்கள்’ என இஸ்ரேலிய இராணுவம் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தனது படைகளை குறைந்தபட்ச அளவிற்கு குறைத்துள்ளது.
இஸ்ரேலிய N12 சனக் செய்தியின்படி
ஆளில்லா விமான அச்சுறுத்தல்கள் மற்றும் தினசரி தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களைப் பாதுகாக்கத் தேவையான குறைந்தபட்ச அளவிற்கு, தெற்கு லெபனானில் உள்ள தனது செயல்பாட்டுப் படைகளைக் குறைக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் ஒரு உடன்பாட்டை எட்டுவதா அல்லது இராணுவத்திற்கு பரந்த இராணுவ நடவடிக்கை சுதந்திரத்தை வழங்குவதா என்ற முடிவை அரசியல் தலைமையிடமிருந்து இஸ்ரேலிய இராணுவம் கோருகிறது.
செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள தற்போதைய நிலைமை "தொடரமுடியாது" என்று இஸ்ரேலிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதேவேளை அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியைக் குறிவைத்து, ரஷ்யாவும் சீனாவும் கியூபாவில் மூன்று மடங்கு உளவுப் பணியாளர்களை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




