SuperTopAds

எபோலா அச்சுறுத்தல் - அமெரிக்காவின் செயலால் விமானம் கனடாவில் அவசரமாகத் தரையிறங்கிய Air France!

ஆசிரியர் - Editor IV
எபோலா அச்சுறுத்தல் - அமெரிக்காவின் செயலால் விமானம் கனடாவில் அவசரமாகத் தரையிறங்கிய Air France!

மத்திய ஆப்பிரிக்காவில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர் தவறுதலாக ஏறியதால், பாரிஸிலிருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவின் மொன்றியால் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 'புண்டிபுகியோ' எபோலா வைரஸ் பரவல் காரணமாகப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொங்கோவைச் சேர்ந்த பயணி ஒருவர் பாரிஸில் "தவறுதலாக" விமானத்தில் ஏற்றப்பட்டதை நடுவானில் கண்டறிந்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு முகமை, பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருதி விமானம் டெட்ராய்டில் தரையிறங்குவதைத் தடை செய்தது.

இதனால் டெட்ராய்ட்டில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மொன்றியாலுக்கு விமானம் திருப்பிவிடப்பட்டதுடன், இம்மாற்றம் குறித்து தரையிறங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் திசை திருப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் விமானப் பணியாளர்கள் முகக்கவசங்களை அணிந்துகொண்டதாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று உள்ளவர்கள் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய பின்னரே எபோலா ஒருவருக்கொருவர் பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Radio