புனித குர்ஆனை அவமதிப்பது ரஷ்யாவில் கடுமையான குற்றம் - புட்டின்!

புனித குர்ஆனை அவமதிப்பது ரஷ்யாவில் கடுமையான குற்றம் என்று அதிபர் Vladimir Putin திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தாகெஸ்தானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜுமா மசூதிக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு புனித குர்ஆனின் பிரதியொன்று பரிசாக வழங்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட அவர், “குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல, அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய புனித நூல்” என்று குறிப்பிட்டார்.
மேலும், மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் குர்ஆன் எரிப்பு சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், ரஷ்ய அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின்படி இத்தகைய செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்றார்.
இறைத்தூதர் முஹம்மது நபியையோ அல்லது புனித நூல்களையோ அவமதிப்பது கருத்துச் சுதந்திரம் அல்ல; அது மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்றும் புதின் தெளிவுபடுத்தியுள்ளார்.




