SuperTopAds

தைவான் விவகாரம் - டோனல்ட் டிரம்ப் விடுத்த அதிரடிக் கருத்து!

ஆசிரியர் - Editor IV
தைவான் விவகாரம் - டோனல்ட் டிரம்ப் விடுத்த அதிரடிக் கருத்து!

தைவான் பிரச்சினையைக் கையாளப்போவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அது தொடர்பில் தைவான் அதிபர் லாய் சிங் டீயிடம் பேசுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

"நான் அவரிடம் பேசுவேன். நான் அனைவருடனும் பேசுவேன்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப்புடன் பேசுவதில் லாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால், இரு தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி அழைப்பு இன்னும் திட்டமிடப்படவில்லை என்று The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

1979ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனாவை அரசதந்திர முறையில் அங்கீகரித்தது. அப்போதிலிருந்து அமெரிக்க, தைவானிய அதிபர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசியதில்லை. 2016ஆம் ஆண்டு டிரம்ப் அதை உடைத்தார்.

அப்போதைய தைவானிய அதிபரான சாய் இங்-வென்னுடன் (Tsai Ing-wen) அவர் தொலைபேசியில் உரையாடினார்.

சீன அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் அது குறித்துப் புகார் அளித்தது.

தைவான் தனது நாட்டின் ஓர் அங்கம் என்று சீனா கூறுகிறது. இராணுவ பலத்தின் மூலம் தைவான் கைப்பற்றப்படலாம் என்றும் சீனா கூறியிருக்கிறது.

சீன இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க தைவான் அமெரிக்காவை அதிகம் சார்ந்திருக்கிறது. நீண்ட காலமாக அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை விற்கிறது.

Radio