SuperTopAds

ஈரான் போரில் 42 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
ஈரான் போரில் 42 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா!

ஈரான் உடனான போரின் போது போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் உட்பட குறைந்தது 42 அமெரிக்க இராணுவ விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அல்லது சேதமடைந்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுப் பிரிவின் (CRS) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இதில் அதிநவீன F-15E ஸ்ட்ரைக் ஈகிள்ஸ், ஒரு F-35A லைட்னிங் II போர் விமானம், MQ-9 ரீப்பர் ஆளில்லா ட்ரோன்கள், KC-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் E-3 சென்ட்ரி உளவு விமானங்கள் உள்ளிட்ட பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ சொத்துக்கள் அடங்கியுள்ளன.

போர்க்களத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டவை மட்டுமன்றி, இராணுவ நடவடிக்கைகளின் போது சேதமடைந்தவை, தரையிறக்கப்பட்ட நிலையில் அழிக்கப்பட்டவை என ஒட்டுமொத்த இழப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) அனைத்து இழப்புகளையும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளதா என்பதில் CRS சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், இந்த மோதலின் இராணுவ மற்றும் நிதி ரீதியான செலவுகள் குறித்த விவாதங்கள் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.

Radio