SuperTopAds

அமெரிக்கா - ஈரான் மோதலைத் தீர்க்க ரஷ்யா தயார் - ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா - ஈரான் மோதலைத் தீர்க்க ரஷ்யா தயார் - ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர்!

அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான மோதலைத் தீர்க்க ரஷ்யா  களமிறங்கியுள்ளது.

பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் உதவத் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்கே ரியாப்கோவ், ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை கூறியுள்ளார்.

இந்த மோதலைத் தீர்க்க ரஷ்யா சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது.

இரு தரப்பிலிருந்தும் முறையான கோரிக்கை வந்தால், நாங்கள் நிச்சயமாக எங்களுடைய உதவிக் கரத்தை நீட்டுவோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

அதே நேரத்தில், நாங்கள் ஒருபோதும் எங்கள் மத்தியஸ்த சேவைகளை அவர்கள் மீது திணித்ததில்லை, இனியும் திணிக்க மாட்டோம்," என்று கூறி, ரஷ்யா தனது ராஜதந்திர எல்லையை மிகத் தெளிவாக வகுத்துள்ளது.

அரசியல் மற்றும் ராஜதந்திர வழிகளில் மட்டுமே தீர்வு காண ரஷ்யா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பிலும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதை ரஷ்யா முழுமையாக

வரவேற்கிறது.

நிலைமையைச் சீராக்கி, நிரந்தர அமைதியை நோக்கிய நகர்வில் பாகிஸ்தான் வகிக்கும் "சுறுசுறுப்பான பங்கை" அவர் குறிப்பாகப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் கடுமையான நிபந்தனைகளால் முடங்கியுள்ள நிலையில், ரஷ்யா தன்னை ஒரு வலுவான 'பின்கதவு மத்தியஸ்தராக' நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

பாகிஸ்தானின் சமாதான முன்னெடுப்பும், ரஷ்யாவின் இந்த ஆதரவும் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துமா? அல்லது வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டியாக மாறுமா? பொதுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Radio