SuperTopAds

தாக்கினால் வாழ்நாள் முழுவதும் வருந்துவீர்கள் - அமெரிக்காவை மிரட்டும் ஈரான்!

ஆசிரியர் - Editor IV
தாக்கினால் வாழ்நாள் முழுவதும் வருந்துவீர்கள் - அமெரிக்காவை மிரட்டும் ஈரான்!

மத்திய கிழக்கில் தற்காலிகப் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகேர் காலிபாப் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானின் 'தஸ்னிம்' (Tasnim) செய்தி நிறுவனத்திடம் கருத்துக் கூறிய அவர் -

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய எதிரி நாடுகளின் வெளிப்படையான மற்றும் ரகசியமான நகர்வுகளைப் பார்க்கும்போது, அவர்கள் 'ஒரு புதிய சுற்றுப் போருக்கு' தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தை ஈரானின் ஆயுதப்படைகள் மிகச் சரியாகப் பயன்படுத்தித் தங்களின் ராணுவ பலத்தை முழுமையாக மீண்டும் கட்டமைத்துள்ளன என்பதில் மக்கள் உறுதியாக நம்பலாம் என்று அவர் தனது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார்.

ஒருவேளை எதிரிகள் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துணிந்தால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த முடிவுக்காக வருந்தும்படி நாங்கள் செய்வோம் என அவர் அமெரிக்காவிற்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.

Radio