SuperTopAds

மட்டக்களப்பு பொது நூலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

ஆசிரியர் - Editor II
மட்டக்களப்பு பொது நூலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

மட்டக்களப்பு பொது நூலகத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றைய தினம் புதன்கிழமை  திறந்து வைத்தார்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட ஜனாதிபதி  பொது நூலகத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின்பராமரிப்பின் கீழ் உள்ள குறித்த பொது நூலகமானது மத்தியரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்டு நவீன வசதிகளை உள்ளடக்கி மூன்று மாடி நூலகமாக அமைக்கப்பட்டுள்ளது 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால,  பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மேலும் பல உயரதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்