டிரம்ப் அச்சுறுத்தல் என்ற பெயரில் சமாதானத்தை மறைக்கப் பார்க்கிறார் - ஈரான்!

வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'X' (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரிபாபாடி மிகக் கடுமையான பதிலை அளித்துள்ளார்.
"அமெரிக்கா ஒருபுறம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகக் கூறினாலும், அதே நேரத்தில் எந்த நிமிடத்திலும் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான ஆக்கிரமிப்பை (Massive Assault) நடத்தப் போவதாக அச்சுறுத்துகிறது.
டிரம்ப் 'அச்சுறுத்தலை' (Threat) அமைதிக்கான வாய்ப்பு என்ற பெயரில் மறைக்கப் பார்க்கிறார்" என்று கரிபாபாடி சாடியுள்ளார்.
மேலும், "எதிரிகளின் எந்தவொரு ராணுவ ஆக்கிரமிப்பையும் ஒன்றுபட்டு, மிகத் தீர்க்கமான முறையில் எதிர்கொள்ள ஈரான் முழுத் தயார் நிலையில் உள்ளது" என்றும் அவர் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மூலமாக 14 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் சமர்ப்பித்துள்ள போதிலும், அமெரிக்கா அச்சுறுத்தல் பாணியைக் கையாளுவது இராஜதந்திர முறிவை நோக்கியே நகர்வதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




