இஸ்ரேலுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ள ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானங்கள்!

தெற்கு லெபனான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவியுள்ள இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு களம் இறக்கியுள்ள அதிநவீன ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமான 'கான்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் தொடர் ட்ரோன் விஸ்வரூபத்தால், தெற்கு லெபனானில் இஸ்ரேலின் சுமார் 80% திட்டமிடப்பட்ட ராணுவ நகர்வுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பணிகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ரேடார்களின் சிக்னல் ஜாமர்களை (Signal Jamming) முறியடிக்கும் வகையில் ஃபைபர்-ஆப்டிக் (Fiber-optic) வயர்கள் மூலம் இயக்கப்படும் இந்த விசித்திர ட்ரோன்கள், இஸ்ரேலிய வீரர்களின் முகாம்களைத் துல்லியமாகத் தாக்கி வருகின்றன.
இந்த அச்சுறுத்தல் காரணமாக, தங்களின் முக்கியப் பகல் நேர ராணுவப் பயிற்சிகள் மற்றும் ரோந்துப் பணிகளைப் படைகள் ஒத்திவைக்க வேண்டியுள்ளதாகவும், பல நடவடிக்கைகள் நள்ளிரவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளன




