ஆக்கிரமிப்புப் போரை மீண்டும் தொடங்கினால், புதிய முனைகளுக்கு போரை விரிவுபடுத்துவோம் - ஈரான்!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான அடுத்தகட்ட தாக்குதலுக்காகக் கால அவகாசம் பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஈரானிய ஆயுதப் படைகள் மற்றும் நாட்டின் உயர்தரப்பு தலைமை எதிரிகளுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
"அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாடுகள் தற்காலிகப் போர்நிறுத்தத்தை மீறி, ஈரான் மீதான ஆக்கிரமிப்புப் போரை மீண்டும் தொடங்க முற்பட்டால், போர் இதுவரை கண்டிராத புதிய முனைகளுக்கு விரிவுபடுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாடுகள் எங்கு மிகவும் பலவீனமாக உள்ளனவோ மற்றும் எந்தவொரு போர்த் தந்திர முறைகளிலும் எங்கு அவர்களுக்குக் கடந்த கால அனுபவம் இல்லையோ, அந்தப் புதிய முனைகளைச் செயல்படுத்த ஈரான் அனைத்துத் தயாரிப்புகளையும் முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எதிரிகள் தங்களின் ராணுவத் திட்டமிடலில் கணிக்கத் தவறிய டொமைன்களில் இந்த முறை போர் நுழையும்" என்று ஈரானிய ராணுவ அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
டிரம்ப் தனது திட்டமிட்ட தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள சூழலில், ஈரானின் இந்த அசிமெட்ரிக் போர் எச்சரிக்கை வளைகுடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்த்ய்ச்க்கது




