SuperTopAds

பரண் உடைந்து விழுந்ததில் மகன் மீது விழுந்த தந்தை - மகன் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
பரண் உடைந்து விழுந்ததில் மகன் மீது விழுந்த தந்தை - மகன் உயிரிழப்பு

கம்பளை மாவட்டம் அட்டுவாவத்தை பகுதியில் 3 வயதான தனது மகன் மீது தந்தை விழுந்ததில் மகன் உயிரிழந்துள்ளார். தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அட்டுவாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தந்தை வீட்டுப் பொருட்களை வைக்கும் பரண் பகுதியின் மேற்பகுதிக்கு ஏறியுள்ளார். 

அந்தச் சமயத்தில் அவரது 3 வயது மகன் கீழே விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

எதிர்பாராத விதமாக பரணின் பலகை உடைந்ததில், கீழே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது தந்தை விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுவனும், தந்தையும் உடனடியாக கம்பளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான் 

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Radio