SuperTopAds

மணல் கலந்து மீன்கள் விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை

ஆசிரியர் - Editor III
மணல் கலந்து மீன்கள் விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை

மணல் கலந்து மீன்கள்  விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை

 அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையிலும் அழுகிய மணல் கலந்த மீன்கள்  விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு  , பிரதேசங்களில் உள்ள பொதுச் சந்தைகள் மற்றும் நடமாடும் மீன் விற்பனை வியாபாரிகள் குறித்த  மீன்களை புதிதாக காட்டுவதற்காகவும் நிறையை மோசடி செய்வதற்காகவும் மண் கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

இதில்  கிரீ மீன்   பாரைக்குட்டி மீன்  சூடை மீன்  நெத்தலி மீன் சீலா மீன்  காரல் மீன்  உள்ளிட்ட சிறு மீன்களில் இவ்வாறான மண் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.