SuperTopAds

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கியவர் கைது

ஆசிரியர் - Editor II
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கியவர் கைது

பாதாள உலகக் குழுத் தலைவன் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயர்தர ரிப்பீட்டர் (Repeater) ரக துப்பாக்கி - 01, மெகசின்கள் - 02 , தோட்டாக்கள் - 10 என்பன அவரிடமிருந்து  கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ஒஸ்மண்ட் குணசேகர, நீண்டகாலமாக திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு முக்கிய நபர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும், அவரிடமிருந்த ஆயுதங்களின் பின்னணி குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.