காலியில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு

காலி - தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காலி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




