SuperTopAds

ஏர்பஸ் விசாரணை: மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்தது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

ஆசிரியர் - Editor II
ஏர்பஸ் விசாரணை: மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்தது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, Airbus விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு  அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் அதில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை  ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் சில ஊடகங்களில் மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானாலும், அப்போது அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம், Airbus ஒப்பந்த விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் CEO கபில சந்திரசேனாவின் மரணத்துக்குப் பின் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Radio