SuperTopAds

இலங்கையில் அடுத்தடுத்து சிக்கும் வெளிநாட்டு கும்பல்

ஆசிரியர் - Editor II
இலங்கையில் அடுத்தடுத்து சிக்கும் வெளிநாட்டு கும்பல்

இணையம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை கைதுசெய்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்தபோதே, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த நபர்களிடமிருந்து 10 கணினிகள், 29 ஆப்பிள் தொலைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

இதேபோன்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் 152 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio