மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய - கொட்டாவ வீதியில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதி விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவர் மற்றும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் மேலும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளுடன் இணைந்து, கொட்டாவையிலிருந்து அத்துருகிரிய நோக்கி அதிகாலை 2 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




