SuperTopAds

தேனிசை செல்லப்பாவுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி!

ஆசிரியர் - Admin
தேனிசை செல்லப்பாவுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி!

ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடி புகழ் பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவுக்கு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் றெட்பானா சந்திப் பகுதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. 

வள்ளுவர்புரம், இளங்கோபுரம், மாணிக்கபுரம் மற்றும் தேராவில் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.     

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் யோ. புரட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.

தமிழ் மக்களின் விடுதலை உணர்வை இசை வழியாக எடுத்துச் சென்ற கலைஞராக போற்றப்படும் தேனிசை செல்லப்பாவின் மறைவு, தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

நிகழ்வில் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி, அவரின் கலைப்பணிகளையும் தமிழர் சமூகத்திற்கான பங்களிப்பையும் நினைவுகூர்ந்தனர்.

Radio