SuperTopAds

மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம்

ஆசிரியர் - Editor II
மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம்

பிரதம மந்திரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க,மே 30 அன்று வெசாக் பௌர்ணமி தினத்தை அனுசரிக்கவும், அதனை முன்னிட்டு மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதன் பிரகாரம், வெசாக் பௌர்ணமி தினத்தைத் தொடர்ந்து வரும் மே 31 (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாக இருக்கும் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சகம் வெளியிடும் என தெரிவித்தார்

Radio