புத்தாண்டு தினத்தில் காதலியை வெட்டி கொலை செய்த காதலன்

மொனராகலை மாவட்டம், வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடொலகம பகுதியில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காதலனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காதலி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நெடொலகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த காதலன் கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள காதலனை கைது செய்வதற்காக வெல்லவாய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.




