SuperTopAds

புத்தாண்டு தினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
புத்தாண்டு தினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு

அனுராதபுரம் மாவட்டம், மிகிந்தலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு தினமான நேற்று இரவு  இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள், மிகிந்தலை பகுதியில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது பலத்த காயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மிகிந்தலை பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Radio