SuperTopAds

காணி தகராறு - புத்தாண்டு தினத்தில் படுகொலையான 3 பிள்ளைகளின் தந்தை

ஆசிரியர் - Editor II
காணி தகராறு - புத்தாண்டு தினத்தில் படுகொலையான 3 பிள்ளைகளின் தந்தை

குருநாகல், வாரியப்பொலைப் பிரதேசத்தில் காணி விவகாரம் காரணமாக, குடும்பஸ்தர் ஒருவர் புத்தாண்டு தினமான நேற்றைய தினம்  கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரான 28 வயதுடைய இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நீண்டகாலப் பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Radio