வயல் வேலை முடிந்து திரும்பிய விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பகுதியில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மெதிரிகிரியை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய விவசாயி ஒருவர், தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென அவரைத் தாக்கியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
யானையின் தாக்குதலினால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மெதிரிகிரியை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




