SuperTopAds

லொறி கவிழ்ந்து விபத்து: இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
லொறி கவிழ்ந்து விபத்து: இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

வாரியப்பொல - நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த லொறி ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுப்பொத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.