சொகுசு பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தில் வெலிகந்த சுசிரிகம பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
சுசிரிகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையும், காலி பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




