SuperTopAds

புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன் உயிரிழப்பு

அனுராதபுரம் - மரதன்கடவலை பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன், நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொல்லன்குட்டிகம பகுதியைச் சேர்ந்த அகார் மொஹமட் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் தனது 9 மற்றும் 13 வயதுடைய சகோதரர்களுடன் இணைந்து, அப்பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீர் நிறைந்த மலசலகூடக் குழிக்குள் அச்சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.