SuperTopAds

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கனரக வாகனத்துடன் பின்னால் வந்த மற்றுமொரு கனரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானதில் சாரதி உயிரிழந்தார். 

தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 40 ஆவது மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தைத் தொடர்ந்து மாத்தறை நோக்கிய திசையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Radio