உடும்புடன் ஒருவர் கைது

வில்பத்து தேசிய பூங்காவின் குக்குல்கடுவ பிரிவு அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட உடும்பு மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பகஹவெவ பகுதியில் வேட்டையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சுமார் 04 அடி நீளமான உயிரிழந்த உடும்பு மற்றும் ஒரு துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவரை நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




