இணையவழி மோசடியில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டினர் சிக்கினர்

இணையம் வழி ஊடாக பண மோசடிகளில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டை சேர்ந்த குழு ஒன்று நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து இணையவழி மோசடியில் ஈடுபட்ட 09 பேரை கைது செய்துள்ளனர்.
கொடகந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் 84 மொபைல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொத்தல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




