நண்பர்களுடன் கடலில் விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

காலி மாவட்டம் ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்' ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார்.
இதன்போது, பிரதேசவாசிகள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்




