ஈரான் போர்க்கப்பலில் இருந்த 208 வீரர்களும் மீட்பு: திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் 'IRIS Bushehr'.!

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் சிக்கியிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Bushehr' போர்க்கப்பலில் இருந்த 208 ஊழியர்களும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கை:
பாதிப்புக்குள்ளான கப்பலில் இருந்த அனைத்து ஊழியர்களையும் இலங்கை கடற்படையினர் தமது கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டு தற்போது கரைக்கு அழைத்து வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தகட்ட நகர்வு:
வீரர்கள் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, செயலிழந்துள்ள ஈரானியப் போர்க்கப்பலை மேலதிக திருத்தப் பணிகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் திருகோணமலை துறைமுகத்திற்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சர்வதேச கடல்சார் உடன்படிக்கைகளின்படி இந்த மனிதாபிமான மீட்புப் பணியை இலங்கை முன்னெடுத்துள்ளது.





