SuperTopAds

ஈரான் கப்பலை தாக்கியதை அமெரிக்கா உரிமை கோரியுள்ளது !

ஆசிரியர் - Admin
ஈரான் கப்பலை தாக்கியதை அமெரிக்கா உரிமை கோரியுள்ளது !

இலங்கையின் தென் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் 'IRIS Dena' மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் அதிரடி காட்சிகளை அமெரிக்க இராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட 'டொர்பிடோ' (Torpedo) ரக ஏவுகணை தாக்கி அழித்துள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் கப்பலில் இருந்த 180 ஈரானிய கடற்படை வீரர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

32 பேர் மீட்கப்பட்டு காலியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்குள்ளான கப்பல் கடலில் மூழ்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Radio