SuperTopAds

கத்தார் ஏர்வேஸ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர் - Admin
கத்தார் ஏர்வேஸ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தனது பயணிகளுக்காக விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, 2026 பிப்ரவரி 28 முதல் மார்ச் 10 வரை பயணிக்க முன்பதிவு செய்துள்ளவர்கள், எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி தமது பயணத் தேதியை 14 நாட்கள் வரை மாற்றிக்கொள்ள முடியும்.

தவிர, விரும்பினால் டிக்கெட் கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் (Refund) வசதியையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஏனைய பயணிகள் கத்தார் ஏர்வேஸ் இணையதளம் அல்லது செயலி (App) மூலம் தமது பயணங்களை நிர்வகிக்கலாம்.

இருப்பினும், வெளி முகவர்கள் அல்லது மூன்றாம் தரப்பு இணையதளங்கள் ஊடாக முன்பதிவு செய்தவர்கள், மேலதிக உதவிகளுக்கு அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.