SuperTopAds

இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இலங்கை பெண் காயம்

ஆசிரியர் - Editor II
இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இலங்கை பெண் காயம்

வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

இவ்வாறு காயமடைந்தவர் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் தங்கியிருந்த வீட்டிற்குத் தாக்குதலில் சேதம் ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.