SuperTopAds

ஓய்வுபெற்ற ஜேர்மன் விமானி நீர்கொழும்பில் சடலமாக மீட்பு

ஆசிரியர் - Editor II
ஓய்வுபெற்ற ஜேர்மன் விமானி நீர்கொழும்பில் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையினுள் உயிரிழந்த நிலையில் ஓய்வுபெற்ற ஜேர்மன் நாட்டு விமானி சடலமாக மீட்கப்பட்டார் 

சடலமாக மீட்கப்பட்டவர் 70  வயதுடைய  பெலாடி அக்மட் ஜோகிம் எனப்படும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களாக இலங்கையில் வசித்து வந்துள்ளார்.

முன்னதாக இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்த இவர், பின்னர் அவரிடமிருந்து சட்டரீதியாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த மரணத்துகான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரின் ஊடாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio