SuperTopAds

எரிபொருள் விலையில் மாற்றம்

ஆசிரியர் - Editor IV
எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

லங்கா டீசல் நான்கு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 281 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

லங்கா சுப்பர் டீசல் 6 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

 ஒக்டேன் 92 ரக பெட்ரோல், ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.