SuperTopAds

RDM Road Discipline Movement ஏற்பாட்டில் 3ஆவது வார வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நடை

ஆசிரியர் - Editor III
RDM Road Discipline Movement ஏற்பாட்டில் 3ஆவது வார வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நடை

RDM Road Discipline Movement ஏற்பாட்டில் 3ஆவது வார வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நடை

வீதி ஒழுங்கு மற்றும் பொதுப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் RDM Road Discipline Movement தொண்டர்களின் ஏற்பாட்டில் 3ஆவது வார வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நடை இன்று (28.02.2026) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த அமைதி நடை Thaikkanagar பகுதியில் இருந்து ஆரம்பித்து Addalaichenai Market வரை முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு வீதி ஒழுங்கின் அவசியத்தை வலியுறுத்தினர்.

விழிப்புணர்வு நடை ஏற்பாடு செய்யப்படுவதன் பிரதான நோக்கங்கள் வீதி ஒழுங்கு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல், பொறுப்புடன் பணியாற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பை ஊக்குவித்து பாராட்டுதல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வையும் பொது பாதுகாப்பையும் வலுப்படுத்துதல் என்பனவாகும்.

“ஒழுக்கமான வீதி – பாதுகாப்பான வாழ்க்கை” என்ற கோஷத்துடன் நடைபெற்ற இந்நடை, சாலை விதிகளைப் பின்பற்றுதல் ஒவ்வொரு குடிமகனின் கடமையென வலியுறுத்தியது. வீதி விபத்துகளை குறைத்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்காற்றும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Radio