மீன் வியாபாரி சுட்டுக்கொலை

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
மீன் விற்பனை செய்து கொண்டிருந்த போது, கார் ஒன்றில் வந்த வந்த இரண்டு நபர்கள் வியாபாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்
இதன் போது காயமடைந்த நபரினை சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார்
9 மில்லி மீட்டர் ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகள் மூலம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் 'டிலைட்' என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது.
இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதுடன், இச்சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




