நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பாக, நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, இக்கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




