சாவகச்சேரி நகரசபைக்கு வாக்குரிமையற்ற வேட்பாளர்! - தமிழ் காங்கிரசுக்கு எதிராக முறைப்பாடு
வாக்காளராக பதிவு செய்யப்படாத ஒருவர், சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில் வேட்பாளராக சேர்க்கப்பட்டிருப்பதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அவர், அரச அலுவலங்களை அரசியல் கட்சிகள் தமது தேவைக்கென உபயோகிப்பது தொடர்பாக வவுனியாவிலிருந்து மற்றொரு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.