SuperTopAds

சாவகச்சேரி நகர சபை – அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிற்கு சிக்கல்

ஆசிரியர் - Editor II
சாவகச்சேரி நகர சபை – அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிற்கு சிக்கல்

சாவகச்சேரி நகர சபைக்கு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர். இரண்டு நாட்களுக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்குரிமை இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் கவனத்தில் எடுக்கப்படாது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்தை மீறும் இந்தச் செயற்பாடானது, சட்ட ரீதியாக கையாள்வதற்கு நீண்டகாலமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பாளர் ஒருவருக்கு வாக்குரிமை கட்டாயம் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வோம். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.